Saturday, October 28, 2006

அறிஞர் அ.ந.கந்தசாமி!

பன்முக ஆளுமையுள்ள ஈழத்திலக்கிய முன்னோடி! சிறு அறிமுகம்!

அறிஞர் அ.ந.கந்தசாமி பல்துறை விற்பன்னராகவிருந்தவர். இலக்கியத்தின் சகல பிரிவுகளிலும் சிறுகதை, நாவல்,நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, கவிதை எனச் சகல பிரிவுகளிலும் கொடி கட்டிப் பறந்தவர். ஈழத்து முற்போக்கிலக்கியத்தின் முன்னோடிகளில் முக்கியமானவராகக் கருதப் படுபவர். தனக்குப் பின்னால் ஓர் எழுத்தாளப் பரம்பரையையே உருவாக்கிச் சென்றவர். செயல் வீரர் கூட. நாற்பதுகளில் வில்லூன்றி மயான சாதிப் படுகொலை பற்றி முதற்தடவையாகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த கவிஞன். புதுமைப் பித்தன் போன்றவர்களை மீண்டும் இனம் கண்டது போல் அ.ந.க.வையும் மீண்டும் விரிவாக இனம் காண்பது ஈழத்துத் தமிழ் இலக்கியத்திற்கு முக்கியம். தான் வாழ்ந்த மிகவும் குறுகிய காலத்தில் சமூகத்திற்காக, மொழிக்காக அ.ந.க ஆற்றிய பங்களிப்பு வியப்பிற்குரியது.

அறிஞர் அ.ந.கந்தசாமி சுமார் 60 சிறுகதைகளாவது எழுதியிருப்பாரென அறியக் கிடக்கின்றது.
அ.ந.கந்தசாமியின் சிறுகதைகளில் சில: 1
.உதவி வந்தது (பாரதி இதழ்) 2.வழிகாட்டி ( பாரதி இதழ்) 3.இரத்த உறவு (பாரதி) 4.புதுப் புனல் ( உதயம் மலரில்) 5.நாயினும் கடையர் ( வீரகேசரி) 6.காளிமுத்து இலங்கை வந்த கதை ( தேசாபிமானி) 7.பாதாள மோகினி (சுதந்திரன்) 8.நள்ளிரவு (சுதந்திரன்) 9.ஐந்தாவது சந்திப்பு ( சுதந்திரன்) 10.பரிசு ( சுதந்திரன்) 11 குருட்டு வாழ்க்கை 12.உலகப் பிரவேசம் 13.ஸ்ரீதனம் 14.பிக்பொக்கட் 15.சாகும் உரிமை 16.கொலைகாரன் 17.சாவுமணி

இவற்றில் 'இரத்த உறவு' சிறுகதை செ.யோகநாதன் தொகுத்திருந்த வெள்ளிப் பாதரசம் தொகுதியிலும் வெளிவந்திருந்தது. 'பதிவுகள்' இதழிலும் மீள் பிரசுரமாகியுள்ளது.
அ.ந.க.வின் குறிப்பிடத் தக்க
கவிதைகளில் சில: மாம்பொழிலாள் நடனம் ( நோக்கு வேனிதழ்) வில்லூன்றி மயானம் ( தினகரன்) கடைசி நம்பிக்கை (மொழிபெயர்ப்புக் கவிதை) வள்ளுவர் நினைவு ரவீந்திரர் எழுத்தாளர் கீதம் துறவியும் குஷ்ட்டரோகியும் (சுதந்திரன் ஜனவரி 14, 1951) நான் செய் நித்திலம் அன்னையர் பிரிவு ( கஸ்தூரிபா பற்றியது) மூன்னேற்றச் சேனை (பாரதி) தேயிலைத் தோட்டத்திலே எதிர்காலச் சித்தன் பாடல் சிந்தனையும் மின்னொளியும் (ஈழகேசரி) கடவுள் என் சோர நாயகன் 'நகரம்' - அ.ந.கந்தசாமி (சுதந்திரன்; மார்ச் 18, 1951) கைதி - அ.ந.கந்தசாமி (சுதந்திரன் ஆகஸ்ட் 8, 1951)

கவீந்திரன் என்னும் பெயரிலும் கவிதைகள் பல படைத்துள்ளார். வீரகேசரியில் வெண்பா எழுதுவது எப்படி என்னும் தொடர் எழுதியுள்ளார். அ.ந.க வின் கவிதைகள் சிலவற்றைப் பதிவுகள் இணையத் தளத்திலும் காணலாம். தள முகவரி:

http://www.pathivukal.com/poems_ank.html

அ.ந.க.வின் புகழ் பெற்ற கட்டுரைகள் சில: தேசிய இலக்கியம் ( மரகதம் அக்டோபர் 1961)
நாடகத் தமிழ் ( தமிழோசை நவம்பர் 1966) மதமாற்றம் (செய்தி, 1967) தான் தோன்றியார் கவிதைகள் Blank Verseஆ? ( வசந்தம் நவம்பர் 1965) மனக்கண் நாவல் முடிவுரை : நாவல் பற்றிய ஆய்வுக் கட்டுரை. - தினகரன் அறிஞர் பெர்னாட்ஷாவும் நாடக விமர்சகர்களும் ( தினகரன் 21/07/67) ஈழத்துத் தமிழுலகு பண்ணார் கவிதையில் பரிணமித்து மகிழ்ந்தது (தினபதி 17-02-69) இன்றைய தமிழிலக்கியம் பற்றிய சில பிரச்சினைகள் ( தேசாபிமானி 15-02-69) நான் ஏன் எழுதுகிறேன்? ( தேசாபிமானி, நுட்பம் 1981) புதிய கோணத்தில் சிலப்பதிகார ஆராய்சி ( சுதந்திரன் 8-07-1951) உலகின் மிகப் பெரிய பழமை வாய்ந்த நாடகாசிரியர் எஸ்கிலாஸ் ( தினகரன் 21--07-67) வழுக்கி விழுந்த எமிலிசோலா ( சுதந்திரன் 14-10-51) பாரதியின் யாழ்ப்பாணச் சுவாமி யார்? ( ஸ்ரீலங்கா, ஆகஸ்ட் 1961) நாடகத் தமிழ் ( தமிழோசை நவம்பர் 1966) இலங்கைத் தமிழ்க் கவிதை வெண்பா எழுதுவது எப்படி (வீரகேசரி)
சுதந்திரன் பத்திரிகையில் வெளிவந்த அ.ந.கந்தசாமியின் இலக்கியக் கட்டுரைகள் சில. இவற்றை அவர் 'கவீந்திரன்' , 'பண்டிதர் திருமலைராயர்' என்னும் பெயர்களில் எழுதியுள்ளார்.
'அரசபோகத்தைத் துறந்து செல்லும் சித்தார்த்த குமாரன்' - அ.ந.கந்தசாமி (கவீந்திரன் என்னும் புனை பெயரில்; சுதந்திரன் மார்ச் 11, 1951) 'தேவியின் அமைதி தரும் அருங்காப்பியம் ஆசிய ஜோதி! நாஞ்சில் கவிமணியிடம் நாம் காணும் கவி மாருதம்! ('கவீந்திரன்' என்னும் புனைபெயரில்; சுதந்திரன் பெப்ருவரி 18, 1951) சஞ்சீவ மலையிலே கண்டெடுத்த 'ரேடியோ' டெலிவிஷன் 'மூலிகைகள்'! நாட்டின் நிலைமையசிச் சித்திரிக்கும் புதுவைச் செங்கரும்பின் கவிதைக் கண்ணாடி!- அ.ந.கந்தசாமி - ('கவீந்திரன்' என்னும் புனைபெயரில்; சுதந்திரன் ஜனவரி 14, 1951) காதலும் அறிவும் களிநடம் புரியும் 'சஞ்சீவி பார்வதத்தின் சாரல்'! புதுவைப் பூங்குயிலின் மனோகரத் தமிழிசையின் மகத்துவம்! - அ.ந.கந்தசாமி - ('கவீந்திரன்' என்னும் புனைபெயரில்; சுதந்திரன் ஜனவரி 7, 1951 ) கண்ணகி பட்சபாதம் காட்டியமை மறுக்க முடியாதது! பார்ப்பார் என்ற பதத்திற்கு புதிய விளக்கம் தருவது பொருந்தாது! சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் இச்சொல் கையாளப்பட்டுள்ள விதம்'! - அ.ந.கந்தசாமி ('பண்டிதர் திருமலைராயர்' என்னும் புனைபெயரில்; சுதந்திரன் ஆகஸ்ட் 16, 1951) பாண்டியன் நெடுஞ்செழியன் நீதிதவறிய கொடுங்கோல் மன்னனன்று! நீதிக்காக உயிர் நீத்த தியாகச் செம்மலே மதுரை மன்னன்!- அ.ந.கந்தசாமி - ('பண்டிதர் திருமலைராயர்' என்னும் புனைபெயரில்; சுதந்திரன் செப்டம்பர் 2, 1951) கண்ணகி பாத்திரம் பெண்மையின் சிறப்பைக் காட்டுகிறதா? பெண்ணடிமையின் சிகரம் என்பதே சாலப்பொருந்தும்! மன்னனின் தவறுக்காக மக்களைத் தீயிட்டுக் கொழுத்திய கொடுமை! - அ.ந.கந்தசாமி - ( 'பண்டிதர் திருமலைராயர்' என்னும் புனைபெயரில்; சுதந்திரன் ஜூலை 8, 1951)


A.N.Kandasamy's English Articles: Valluvar-1: What is unique?Three sided genius.- A.N.Kandasamy...
enter From the pages of arthasastra! Hoarders, Blackmarketeers & Smugglers!- By A.N.Kandasamy-...enter
அ.ந.க.வின் நாடகங்கள்: மதமாற்றம் ( கொழும்பில் மூன்று தடவைகள் மேடையேறிப் பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிய நாடகமிது. ஆங்கிலப் பத்திரிகைகள், தமிழ்ப் பத்திரிகைகளிலெல்லாம் பல விமர்சனங்கள்
இந்நாடகம் பற்றி வெளிவந்துள்ளன. இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடாக எண்பதுகளின் இறுதிப் பகுதியில் வெளி வந்தது). தாஜ்மகால் உதயம் அரச நட்பு கடைசி ஆசை

அ.ந.க.வின் நாவல்கள்:
மனக்கண் ( தினகரனில் தொடராக வெளிவந்து பலரின் ஆதரவினைப் பெற்ற நாவலிது. பின்னர்சில்லையூர் செல்வராசனால் வானொலியிலும் நாடகமாக ஒலிபரப்பப் பட்டது ). கழனி வெள்ளம் ( இறுதியாக அ.ந.க. எழுதிய நாவல்.செ.கணேசலிங்கனிடமிருந்த நாவலிது. 1983கலவரத்தில் எரியுண்டு போனதாக அறியக் கிடக்கின்றது).

அ.ந.க. எழுதிய சிறுவர் நாவல்: சங்கீதப் பிசாசு ( சிரித்திரனில் வெளி வந்தது. பின்னர் சில அத்தியாயங்கள் சிரித்திரன் வெளியிட்ட கண்மணி சிறுவர் மாத இதழிலும் வெளி வந்திருக்கின்றன.)
அ.ந.க.வின் மொழிபெயர்ப்பு நாவல்கள்: நாநா - எமிலி சோலா (நாவல்)] பொம்மை மாநகர் (சரித்திர நாவல், ஸ்ரீலங்கா)
அ.ந.கந்தசாமி எழுதிய வாழ்வியல் வெற்றிக்கான மனோதத்துவ நூல்: வெற்றியின் இரகசியங்கள் ( பாரி நிலைய வெளியீடாக வெளிவந்தது. இந்தத் தலைப்பு பின்னர் அகிலனின் நூலொன்றிற்கும் பாரி நிலையத்தினரால் திருடப் பட்டு பாவிக்கபட்டுள்ளது.)..
.உள்ளே
அ.ந.க.வின் மொழிபெயர்ப்புகள்: நாநா - எமிலி சோலா (நாவல்)] பொம்மை மாநகர் (சரித்திர நாவல், ஸ்ரீலங்கா) பெட்ராண்ட் ரஸ்ஸலின் 'யூத அராபிய உறவுகள்'
அ.ந.கந்தசாமி பார்த்த வேலைகள்: ஆரம்பத்தில் ஒப்சேவர் ஆங்கிலப் பத்திரிகையில் புருவ் ரீடர். வீரகேசரி ஆசிரியர் குழு. கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான "தேசாபிமானி"யின் முதலாவது ஆரம்பகால ஆசிரியர். இவர்மறைவின் போது தேசாபிமானி நினைவுச் சிறப்பிதழே வெளியிட்டது. அதில் "போர்ச்சுவாலை அமரச் சுடராகியது" எனக் குறிப்பிடப் பட்டிருந்ததும் ஞாபகம் வருகின்றது. மலையகத்தின் எல்பிட்டியில் சிறிது காலம் தோட்டத் தொழிலாளர்களின் பிரதிநிதியாகவும் கடமையாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய பொழுது அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடியதன் காரணமாகப் பதவி விலகினார். சுதந்திரனின்ஆரம்பகால ஆசிரியராகவிருந்தார். கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற டிராம் தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்தவர்களில் அ.ந.க. முக்கியமானவர். சுதந்திரனில் பணியாற்றிய பொழுது சோலாவின் 'நாநா' நாவலை மொழிபெயர்த்து தொடராக வெளியிட்டார். பண்டிதர் திருமலைராயர் என்னும் பெயரில் சிலப்பதிகாரம் சம்பந்தமாகப் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். பெரியார் தனது குடியரசு பத்திரிகையில் அவற்றைப் பிரசுரித்து ஆசிரியத் தலையங்கமும் எழுதியுள்ளதாகத் தெரிய வருகின்றது. அரசாங்கத் தகவற் பகுதியில் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். ஆங்கிலப் பத்திரிகையான 'டிரிபியூன்'னில் சிலகாலம் பணியாற்றினார். அப்போது திருக்குறள் பற்றிப் பல ஆங்கில ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.


அ.ந.க பற்றி எழுதியவர்களில் சிலர்:
எழுத்துக்காக வாழ்ந்த அ.ந.கந்தசாமி! - வ.ந.கிரிதரன் -...
உள்ளே சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன் (தொடர் கட்டுரை) - அந்தனி ஜீவா (தினகரனில் பெப்ரவரி 12,1984இலிருந்து ஏப்ரல் 1, 1984 வரை). கந்தனுடன் உள்ளம் கலந்த சுவைக் கணங்கள்!- சில்லையூர் செல்வராசன் அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள்!எஸ்.அகத்தியர் A.N.KANTHASAMY ! a rationalist of a fine order!.. By K.S.Sivakumaran நினைவின் அலைகள் - அந்தனி ஜீவா ( மல்லிகையில்) அ.ந.க.வும் அவர் சிருஷ்டிகளும் ( தமிழமுது மார்கழி 1970 ஆசிரியத் தலையங்கம். அட்டைப் படத்திலும் அ.ந.க). ஒட்டிப் பிறவாத இரட்டையர் அ.ந.க.வும் எஸ்.பொ.வும் ( மரகதம் அக்டோபர் 1961) அ.ந.கந்தசாமி (ஈழத்துச் சிறுகதை மணிகள் நூல், செம்பியன் செல்வனால் எழுதப் பட்டது). மல்லிகையின் அட்டைப்பட ஓவியத் தொகுப்பு நூல். ( மல்லிகை அட்டைப் பட ஓவியமாகவும் அ.ந.க.) முற்போக்கிலக்கியத்தின் கலங்கரை விளக்கம்- எஸ்.அகத்தியர் (மல்லிகையில்) ஈழத்துத் தமிழ்கவிதை வளமும் வரலாறும், அ.ந.க.வும் மக்கள் இலக்கியமும் ( ஈழநாடு பத்திரிகையில் கலாநிதி நா.சுப்பிரமணியம்) அ.ந.கந்தசாமி பற்றிய பல வ.ந.கிரிதரனின் கட்டுரைகள், தாயகம் (கனடா), ஆறாந்திணை (இணைய இதழ்), பதிவுகள், செரந்தீபம் (கனடா) , ழகரம் (கனடா) போன்றவற்றில் வெளி வந்துள்ளன. யாழ் பல்கலைக் கழக மாணவியான செல்வி. ஜுவான என்பவர் அ.ந.கந்தசாமி படைப்புகளை ஆய்வுக் கட்டுரையாக வடித்துள்ளார்.
சிரித்திரன் இதழாசிரியர் அ.ந.க.வின் பால் அதிக மதிப்பு வைத்திருந்தவர். சிரித்திரனில் அ.ந.கந்தசாமி நினைவு தினச் சிறுகதைப் போட்டியொன்றினையும் நடாத்தியவர். தனது நினைவலைகளாக வெளிவந்த நூலில் ஆரம்ப காலத்தில் அ.ந.க செய்த உதவிகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் கைலாசபதி தனது 'ஒப்பியல் இலக்கியம்' நூலினை அ.ந.க.விற்கே சமர்ப்பணம் செய்துள்ளார். அகஸ்தியரும் தனது நாவலொன்றினை அ.ந.க.விற்கும் சமர்ப்பணம் செய்துள்ளார்.மகாகவி தனது 'கண்மணியாள் காதையினை' அ.ந.க.விற்குச் சமர்ப்பணம் செய்துள்ளார். பிரபல ஈழத்து எழுத்தாளரும் , மல்லிகை இதழ் ஆசிரியருமான டொமினிக் ஜீவா கேள்வியொன்றிற்குப் பதிலளிக்கையில் 'நான் படித்த பல்கலைக் கழகம் அ.ந.க.' எனக் குறிப்பிடுகின்றார் ( மல்லிகைவெளியீடான "தூண்டில்" நூலில்).
மனக்கண் -அறிஞர் அ.ந.கந்தசாமி...
உள்ளே அ.ந.க நினைவு தினக்கட்டுரை: எழுத்துக்காக வாழ்ந்த அ.ந.கந்தசாமி! - வ.ந.கிரிதரன் -.....உள்ளே

A.N.Kandasamy's English Articles: Valluvar-1! What is unique? Three sided genius. By A.N.Kandasamy..
.enter From the pages of arthasastra! Hoarders, Blackmarketeers & Smugglers!- By A.N.Kandasamy-...enter தொடரும் தேடல்: அ.ந.க.வின் படைப்புகள்! - வ.ந.கிரிதரன்-...உள்ளே அறிஞர் அ.ந.கந்தசாமி !பன்முக ஆளுமையுள்ள ஈழத்திலக்கிய முன்னோடி!சிறு அறிமுகம்!. ...உள்ளே சாகாத இலக்கியத்தின்சரித்திர நாயகன் அந்தனி ஜீவா-..உள்ளே "மதமாற்றம்"அ.ந.கந்தசாமி.. உள்ளே கந்தனுடன் உள்ளம் கலந்த சுவைக் கணங்கள்! -சில்லையூர் செல்வராசன் -...உள்ளே அ.ந.க.வும் அ.செ.மு.வும் அசல் யாழ்ப்பாணிகள்!- உள்ளே. கடைசி ஆசை! (தாஜ் மகால் உதயம் பற்றிய நாடகம்!) - அ.ந.கந்தசாமி -....உள்ளே
வெற்றியின் இரகசியங்கள்!- அறிஞர் அ.ந.கந்தசாமி - அத்தியாயம் 2: மனத்தின் தன்மைகள்! (முன் தொடர்ச்சி)....உள்ளே அத்தியாயம் 2: மனத்தின் தன்மைகள்....உள்ளே கடந்தவை...உள்ளே

நன்றி: பதிவுகள்.காம் http://www.pathivukal.com
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!' 'Sharing Knowledge with every one!'