Wednesday, October 18, 2006

கிரன் தேசாயின் நாவலுக்கு 'புக்கர்' விருது!

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் அனிதா தேசாயின் மகளான கிரன் தேசாயிற்கு 2006ற்கான இங்கிலாந்தின் 'மான் புக்கர் விருது' (Man Booker Price) அவரது நாவலான The Inheritance of Loss' என்னும் நூலிற்குக் கிடைத்துள்ளது. பரிசுத் தொகை: 50,000 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ். 35 வயதான இவரே ஆங்கில இலக்கிய உலகில் நோபல் பரிசுக்கடுத்து மதிப்புக்குரியதாகக் கருதப்படும் இவ்விருதினை மிக இளவயதில் பெறும் படைப்பாளி. இவருக்கு முதல் அருந்ததி ராய் இவ்விருதினைத் தனது நாவலான The God of Small Things'ற்குத் தனது 36 வயதில் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்விருதினைப் பெறும் மூன்றாவது இந்தியர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.முதலிருவர்: சல்மான ரஷ்டி (தனது Midnight Children நாவலிற்காக) அடுத்தவர் அருந்ததிராய். இவரது தாயாரான அனிதா தேசாய் மூன்று தடவைகள் இறுதிச் சுற்றிற்குத் தெரிவு செய்யப்பட்டபோதும் விருதினைப் பெறவில்லை. கிரன் தேசாய் மேற்படி நூலினைத் தனது தாயாரான அனிதா தேசாயிற்கே அர்ப்பணித்துள்ளார்.

விபத்தொன்றில் தனது பெற்றோர்களை இழந்து நிராதராவான இளம் பெண்ணொருத்தி மேற்கில் கல்வி கற்றி நீதிபதியாகவிருந்து ஓய்வு பெற்று இமாலயத்தின் அடிவாரத்தில் வாழும் தாத்தாவுடன் வாழுகிறாள். அவளை வைத்தும், நியூயார்க்கில் வசிக்கும் சட்டவிரோத குடியேற்ற வாசியான சமையல்காரனொருவனின் மகனான , அங்குள்ள உணவகங்களில் தொழிலாளியாகப் பணிபுரியுமொரு இளைஞனொருவனை வைத்தும் பின்னப்பட்ட கதை இந்தியாவுக்கும், நியுயார்க்கிற்குமிடையில் நடைபெறுவதாகச் செல்கிறது.

1971இல் இந்தியாவில் பிறந்த கிரன் தேசாய் தனது கல்வியை இந்தியாவிலும், இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் தொடர்ந்தவர். எற்கனவே இவரது முதல் நாவலான Hullabaloo in the Guava Orchard 1998இல் வெளிவந்து 'Betty Trask' விருதினைப் பெற்றுள்ளது. The 'Inheritance of Loss' இவரது இரண்டாவது நாவல். அருந்தது ராயின் முதல் நாவல் பரிசினைப் பெற்றால் கிரான் தேசாயின் இரண்டாவது நாவல் பரிசினைத் தட்டிச் சென்றுள்ளது. பிரிட்டனின் 'மான்' (Man) 'புக்கர்' விருதினை இந்திய 'வுமன்' எழுத்தாளர்கள் மிகக் குறைந்த வயதில் தட்டிச் செல்ல ஆரம்பித்துள்ளார்கள். சரியான போட்டிதான்.

நன்றி: பதிவுகள்.காம் (http://www.pathivukal.com )

பதிவுகள்
'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one!'


No comments: